ஆழ்ந்த இரங்கல்கள்: கேரளாவுக்கு ஆறுதல் கூறிய கனடிய பிரதமர்

Report Print Raju Raju in கனடா

கேரள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரணங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் கேரள வெள்ளம் தொடர்பாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்