பிரித்தானியா இளவரசர் இல்லாமல் கனடா செல்லும் இளவரசி மெர்க்கல்! அரண்மனை அனுப்பிய முக்கிய கடிதம்

Report Print Santhan in கனடா

பிரித்தானியா இளவரசர் ஹரி இல்லாமல் மெர்க்கல் கனடாவிற்கு செல்லவுள்ளதாகவும், அவரிடம் யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று ஏர் கனடா நிறுவனத்திற்கு அரண்மனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்ன பல நிகழ்ச்சிகளுக்கு இந்த ஜோடி ஒன்றாக சென்று வந்த நிலையில், கனடாவிற்கு ஹரி இல்லாமல் தனியாக மெர்க்கல் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக Kensington அரண்மனை Air Canada நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் விமானத்தில் இளவரசி மெர்க்கலுடன் யாரும் பேசாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி அவர் அருகில் வந்து யாரும் புகைப்படம் எடுக்காமல் பார்த்து கொள்ளும் படி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசி மெர்க்கல் அங்கிருக்கும் தன் நண்பர்களை சந்திப்பதற்காகவே செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் என்ன காரணத்திற்காக செல்கிறார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்