நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்: மற்றொரு பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இரண்டு பெண்களை ஆண் ஒருவர் கத்தியால் குத்திய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டொரண்டோவில் உள்ள கிப்லிங் அவன்யூ மற்றும் டிக்சன் சாலையில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது.

கத்திக்குத்து பட்ட பெண்ணொருவர் சாலையில் உயிரிழந்த நிலையில், இன்னொரு பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்