கனடாவில் மாயமான விமானம்: அதிர்ச்சி கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Edson பகுதியிலிருந்து Eestlock நோக்கி புறப்பட்ட சிறு விமானம் ஒன்று திடீரென மாயமானது.

அந்த விமானத்தில் Scott Schneider என்னும் விமானியும் அவரது செல்ல நாயும் மட்டும் இருந்தனர்.

கடுமையான தேடுதல் வேட்டைக்கு பிறகு Edmonton உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பதை கண்ட பொலிசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு உயிரற்ற உடலும் கிடப்பதைக் கண்டனர்.

இந்நிலையில் அந்த செய்தியை கனடா விமானப்படையும் உறுதி செய்துள்ளது.

அது வெளியிட்டுள்ள செய்தியில் Scott Schneiderஇன் தேடுதல் வேட்டையில் அவரது விமானம் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமானப்படையும் மீட்புக் குழுவினரும் சென்று பார்க்கும்போது அவர் உயிருடன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் பயணித்த விமானி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணத்தை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers