தவறான பாதையில் 1,500 மைல்கள் பயணம் செய்த விமான பயணி: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் Inuvik பகுதிக்கு செல்ல வேண்டிய நபர் ஒருவர் தவறான விமானத்தில் ஏறி 1,500 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கனடாவின் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் திரைப்பட்ட இயக்குனரான Christopher Paetkau. சம்பவம் நடந்த ஞாயிறன்று Yellowknife பகுதியில் இருந்து Inuvik பகுதிக்கு செல்ல விமானம் ஏறியுள்ளார்.

ஆனால் அந்த விமானமானது நேரெதிர் திசையில் அமைந்துள்ள Iqaluit பகுதிக்கு செல்லும் விமானம் என்பதை அவர் பின்னரே உணர்ந்துள்ளார்.

14 மணி நேர பயணம் மேற்கொண்ட அவர் நடந்த தவறை புரிந்து கொண்டு விமான பணிப்பெண்களுடன் நட்பாக நடந்து கொண்டுள்ளார்.

விமானம் புறப்படும் முன்னர் 4-வது வாசலில் காத்திருந்த அவர், புறப்பட தயாரான நிலையில் 3 விமானங்கள் உள்ளதை பார்த்துள்ளார்.

அப்போது 3 விமானத்திற்கான கடைசி அழைப்பும் வெளியாகியுள்ளது. பரபரப்பான அந்த நிமிடத்தில் எது தமக்கான விமானம் என்பதை உறுதி செய்வதற்குள் அவர் ஒரு விமானத்தில் ஏறியுள்ளார்.

மட்டுமின்றி விமானம் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு ஏறியதால், விமானி தெரிவித்த தகவலையும் அவர் சரியாக கவனிக்கவில்லை.

சில மணி நேரங்களுக்கு பின்னர் பணிப்பெண் ஒருவரிடம் Inuvik செல்ல இனி எத்தனை மணி நேரமாகும் என வினவியுள்ளார்.

விமான பணிப்பெண்ணின் முக பாவங்களை கவனித்த அவர் அப்போது தான் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்துள்ளார்.

கிறிஸ்டோபரின் கேள்வி கேட்டு வாய் பிளந்த பணிப்பெண், நாம் Iqaluit பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

விமான பயணம் முழுவதும் தமக்கு நேர்ந்த சம்பவங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்த கிறிஸ்டோபர், தமக்கு கோபம் இல்லை எனவும், இது முழுக்க முழுக்க தமது தவறே எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers