15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண்: தற்போது எப்படியுள்ளார்?

Report Print Raju Raju in கனடா
411Shares
411Shares
ibctamil.com

கனடாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சோமாலியாவில் 15 மாதங்கள் கடத்தப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொண்டு பணிகளை செய்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

கனடாவின் அல்பர்டாவில் பிறந்தவர் அமண்டா லிண்ட்அவுட்.

பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அமண்டா கடந்த 2008-ல் வேலை விடயமாக சோமாலியா சென்றார்.

அவருடன் இன்னொரு பத்திரிக்கையாளரான நிஜில் பிரெனென், சோமாலி மொழிபெயர்ப்பாளர் மற்றும் இரண்டு ஓட்டுனர்கள் உடன் சென்றனர்.

இந்நிலையில் அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் அமண்டாவையும், நிஜிலையும் கடத்தி சென்று தனித்தனியாக அடைத்து வைத்தார்கள்.

15 மாதங்கள் அவர்களிடம் சிக்கி கொண்டார் அமண்டா.

அந்த காலக்கட்டத்தில் அமண்டா பலாத்காரம் செய்யப்பட்டதோடு, பலவிதமாக துன்புறுத்தப்பட்டார்.

இறுதியாக 15 மாதங்கள் கழித்து அமண்டா விடுவிக்கப்பட்டார்.

கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை அமண்டா குடும்பத்தார் கொடுத்த நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து நிஜிலும் விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் தற்கொலைக்கு எல்லாம் முயன்ற அமண்டா அதிலிருந்து மீண்டு தற்போது தொண்டு நிறுவன வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமண்டாவை கடத்தியதில் முக்கிய பங்கு வகித்த அலி உமர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த யூன் மாதம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்