கண்ணீர் விட்டுக் கதறிய நீதிபதி, எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்: கனடாவில் விநோத வழக்கு

Report Print Balamanuvelan in கனடா

வழக்கு ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதி ஒருவர் கண்ணீர் விட்டுக் கதற, அவரால் இனி வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்க முடியாது, எனவே அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்த விநோத சம்பவம் கனடாவில் நடந்தேறியது.

Jeremy Melvin Carlson என்னும் நபர் சதாரண மனிதர்களை விட குறைந்த IQ கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில் ஒரு திருநங்கையாக அவர் மாறினார். இந்த மாற்றத்தின்போது அவர் 15 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுமிகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருத்தியின் தாய், தன் மகள் பாலியல் ரீதியாக தொடர்ந்து பலமுறை துன்புறுத்தப்பட்டதால் சமுதாயத்தை எதிர் கொள்ளும் திறனுடைய ஒரு சாதாரண பெண்ணாக மாற இயலாமல், தன் சிறு வயதுக்கே உரிய களங்கமற்ற தன்மையை இழந்து விட்டதாகவும், உலகம் பாதுகாப்பானது என்ற உணர்வையே இழந்து விட்டதாகவும், இனி தன்னால் அதை சரி செய்ய இயலாது என்றும் கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிபதி Monica McParland, கண்ணீர் விட்டுக் கதறிவிட்டார்.

இதனால் எதிர்தரப்பு வழக்கறிஞரான Jacqueline Halliburn, இனி நீதிபதியால் நியாயமான தீர்ப்பு அளிக்க இயலுமா என்று கேள்வி எழுப்பியதோடு, வேண்டுமானால் அவர் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேறொரு நீதிபதியை நியமிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டு சட்டவியல் நிபுணர்கள், நீதிபதி அழுததில் எந்த தவறும் இல்லை என்றும், எல்லா மனிதர்களும் உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடியவர்கள்தான் என்றும், இதனால் தீர்ப்பு பாதிக்கப்படும் என்று எண்ணுவது தவறு என்றும், உணர்ச்சிகள் வேறு, காரண காரியங்களை ஆராய்ந்து தீர்ப்பளிப்பது வேறு என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்டு 17 வாக்கில் தீர்ப்புக்காக மீண்டும் நீதிமன்றம் கூடலாம் என நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்