கனடாவில் தமிழுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த உதவி

Report Print Kabilan in கனடா
565Shares
565Shares
lankasrimarket.com

ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை பெறுவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சியின் மூலம் நிதி உதவி அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழ் இருக்கை பெற உலகெங்கிலும் உள்ள தமிழார்வலர்கள் உதவி வந்த நிலையில்

தமிழக அரசும் தலா 9.75 கோடியை அளிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முடிவில் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிஷான் நித்தி ஆகியோர் 25,000 டொலர்களை தமிழ் இருக்கைக்காக ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான விஜய் ஜானகிராமனிடம் வழங்கினர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்