உலக நாடுகளிலேயே சிறந்த நாடாக ஜொலிக்கும் கனடா!

Report Print Raju Raju in கனடா

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா.

இந்த நாடு பல சிறப்பம்சங்களை கொண்டது, அதிலும் இந்நாட்டின் அரசாங்கத்துக்கு தனி சிறப்பு உண்டு.

ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அந்த துறையில் வல்லுநர்களாகவே இருக்கின்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர்- ஒரு பட்டம் படித்த மருத்துவராக இருக்கிறார், இதன் மூலம் அவர் அந்த துறையின் விடயங்களை எளிதாக புரிந்து கொள்கிறார்.

போக்குவரத்து துறை அமைச்சர்- ஒரு திறமையான விண்வெளி வீரர் ஆவார்.

தேசிய பாதுகாப்பு அமைச்சர்- அனுபவமிக்க போர் வீராக இருந்துள்ளார்.

இளைஞர் விவகாரத் துறை அமைச்சருக்கு வயது 45 க்கு கீழ் தான்!.

வேளாண்துறை அமைச்சர்- விவசாயம் செய்தவர்.

பொருளாதார அமைச்சர்- அடிப்படையில் ஒரு நிதி ஆய்வாளர் ஆவார்.

நிதித்துறை அமைச்சர்- வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை ஏற்கனவே நிருபித்துள்ளார்.

நீதித்துறை அமைச்சர்- சட்டம் படித்த தலைமை வழக்கறிஞராகவும் செயல்படுகிறார்.

விளையாட்டுத் துறை அமைச்சர்- பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உள்ளது.

அறிவியல் துறைக்கு அமைச்சர்- டாக்டரேட் பட்டம் பெற்றவர் ஆவார்.

மேலும் கனடா நாட்டின் அமைச்சரவையில் உள்ள அனைவரும் நல்ல படித்த தொழிற் பண்பாட்டாளர்கள் மற்றும் அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments