பிரித்தானிய இளவரசிக்கு கிடைத்த சூப்பரான பரிசு

Report Print Deepthi Deepthi in கனடா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனவி மற்றும் குழந்தைகளுடன் கனடாவிற்கு 8 நாட்கள் சுற்றுப்பயணமாக மேற்கொண்டுள்ளார்.

நேற்று கனடா சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட்டிற்கு முதல் சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் முதல் நாள் நிகழ்வாக, Vancouver - இல் செயல்பட்டு வரும் சுகாதார சேவை மையத்துக்கு சென்றுள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் சந்திக்கும் போதை மருந்து மற்றும் மது பிரச்சினைகள் போன்றவற்றை கையாள்வதற்காக இந்த சுகாதார ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இதன்போது, கனடிய பிரதமர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார், இந்த மையத்துக்கு சென்ற இவர்களுக்கு 1000 பேர் வரவேற்பளித்தனர். மேலும் அங்கிருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், அங்கு குழந்தைகள் விளையாடும் அழகையும் ரசித்து பார்த்த இவர்களுக்கு, அந்த மையத்தில் ஒரு சிறுமி அழகிய கரடி பொம்மையை இவர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.

குட்டி இளவரசர் ஜோர்ஜையும், சார்லோட்டையும் செவிலித்தாயாரிடம் ஒப்படைத்து விட்டு, இவர்கள் இருவர் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த சுகாதார மையத்தினை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், கனடிய அமைச்சர்கள் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments