இன்று ஒரே நாளில் தங்கம் விலை சற்று சரிவு

Report Print Kavitha in வர்த்தகம்

கடந்த ஒரு மாதமாக உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது.

இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.

அதன்பின்னர் பிற்பகல் வர்த்தகத்தின்போதும் தங்கம் விலை மேலும் குறைந்ததுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,264-க்கும் விற்பனையாகுகின்றது.

ஒரு கிராம் ரூ.3,658-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்