எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்கனும்? இல்லை அபராதம் தான்

Report Print Santhan in வர்த்தகம்

வங்கி சேமிப்பில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் பிரச்சனை மினிமம் பேலன்ஸ் தான். வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற வங்கியின் விதிமுறையை நாம் தவறவிட்டால், கண்டிப்பாக அபராதம் செலுத்த நேரிடும்.

அப்படி எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸை முறையாக கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் பிரபல வங்கிகள் எவ்வளவு அபராதம் வசூல் செய்கின்றன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

  • எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும்.
  • நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். இதை பின்பற்றாதவர்கள், மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.
  • நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் 7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers