அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in வர்த்தகம்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக நேற்றைய தினம் காணப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்