அமெரிக்காவின் கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்கம்

Report Print Kavitha in வர்த்தகம்

இந்திய ரூபாயை அமெரிக்கா தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ''டிரேஷரி டிபார்ட்மென்ட்'' உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை ''கண்காணிப்பு லிஸ்டில்'' வைத்துள்ளது.

அந்தவகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய வலிமையான பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் இருக்கும். முன்பு இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக வளர்ந்த காரணத்தால், இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டது.

ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு அடிக்கடி 73 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது.

இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. மற்றும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்த்து அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என கருதப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்