தொடர்ந்தும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

Report Print Kavitha in வர்த்தகம்

கடந்த மூன்று மாதங்களாக அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மிக மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ.74.45-க்கு வர்த்தகம் ஆகிறது.

மேலும் ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது.

டொலருக்கு எதிராக இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ரூபாய்கள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில் தற்போது இந்திய ரூபாய் சந்தித்துள்ள வீழ்ச்சியானது வரலாறு காணாதது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்