அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இந்திய நாணயப் பரிமாற்றம்: காரணம் என்ன?

Report Print Kabilan in வர்த்தகம்
38Shares
38Shares
ibctamil.com

இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், இந்திய நாணயப் பரிமாற்றத்தை அமெரிக்கா தனது கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சீன பொருட்களுக்கு அமெரிக்க கூடுதல் வரி விதித்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவிதம் வரியை உயர்த்தியது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிகரிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவின் நாணய நடவடிக்கைகளும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க நிதித்துறை கூறுகையில், இந்த நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக செயலாக்கங்கள் மேம்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல சீன நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேலும் சீனாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுப்படுகிறது.

சீனா, ஜப்பான், ஜேர்மனி, தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகள் இதுவரை அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்