43 மில்லியன் பெறுமதியான அரச காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை

Report Print Steephen Steephen in வர்த்தகம்

43 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான அரச காப்பீட்டு பத்திரங்கள் இந்த வாரத்திற்குள் ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி 21 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

அத்துடன் செப்டம்பர் 29 ஆம் திகதி 22 மில்லியன் பெறுமதியான திறைசேரி பிணை முறிப்பத்திரங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன.

அரச காப்பீட்டு பத்திரங்களை விற்பனை செய்வதற்காக விற்பனையாளர்களிடம் இருந்து கேள்விமனு கோரப்பட உள்ளதாக மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களம் கூறியுள்ளது.

மத்திய வங்கி வழங்கியுள்ள இலத்திரனியல் கேள்விமனு வசதிகள் மூலமே கேள்வி மனுக்களை முன்வைக்க முடியும்.

சந்தை நிலைமைகளின் அடிப்படையில், மத்திய வங்கி ஏல விற்பனையை அறிவிக்கும் எனவும் மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments