அதிகமாக காபியை பருகினால் முகப்பரு வருமா?

Report Print Kavitha in அழகு
25Shares

பொதுவாக முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கின்றன.

ஆனால் முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

பால் பொருட்கள், பிரெட்டுகள், காரமான மற்றும் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகள் உள்பட பலதரப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் முகப்பருக்கள் தோன்றும்.

அதுமட்டுமின்றி காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபியை அதிகமாக பருகும் பழக்கம் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதற்கு என்ன காரணம் என்று நாமும் தெரிந்து கொள்ளவோம்.

காரணம் என்ன?

காபியில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது.

அவை தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு முகப்பருகள் தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகின்றன.

அதிகமான அளவு காபி குடிக்கும் போது ஏன் முகப்பரு வருகின்றது?
  • அதிகமான அளவு காபி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும்.
  • அதாவது உடலில் அமிலத்தின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்ப நீரிழப்பு ஏற்படும்.
  • காபியை அதிகமாக உட்கொள்ளும்போது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது.
  • அத்துடன் அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும். அப்போது இயல்பாகவே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும்.
  • உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

எனவே முகப்பரு பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகுபவர்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்