முகத்துல சுருக்கம் வந்துடுச்சா? எப்படி போக்கலாம்?

Report Print Kavitha in அழகு
984Shares

பொதுவாக வயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான்.

ஆனால், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில செயல்களை மேற்கொள்ளும் போது முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம்.

அந்தவகையில் தற்போது முகச்சுருக்கத்தை நீக்க என்ன பண்ணலாம் என பார்ப்போம்.

தேவை

  • அவகேடோ பழம் = மசித்தது 4 டீஸ்பூன்
  • கோக்கோ பவுடர்- 2 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்
  • ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

அனைத்து பொருள்களையும் பவுலில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்ததும் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விடவும்.

பிறகு அதை 45 நிமிடங்கள் வரை காயவிட்டு முகத்தை மிதமான நீரில் கழுவி எடுக்கவும். இரண்டு முறை செய்தாலே இதன் பலனை உணர முடியும்.

நன்மைகள்

  • அவகேடோ சிறந்த ஆரோக்கியம் தருவதோடு அது சருமத்தையும் அழகாக வைக்க உதவுகிறது. இது சரும அழற்சியை போக்க கூடும். முகப்பருவை தடுக்க கூடியதும் கூட. இது சரும வறட்சியை போக்கி சரும நிறத்தை மேம்படுத்தவும் செய்வதாக சொல்லப்படுகிறது.

  • வெயிலால் உண்டாகும் சரும பாதிப்பை போக்கி சருமத்தை வீக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது.

  • சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்க உதவுவதில் சாக்கோ உதவக்கூடும். ஏனெனில் இது முகத்தின் வயதான குறிகளை குறைக்க செய்கிறது.

  • சருமத்தின் மீது படக்கூடிய புற ஊதாக்கதிர்களின் தீங்கு குறைக்கும் குணத்தை கோக்கோ கொண்டிருக்கிறது. இது சருமத்தில் நீரேற்றத்தை அதிகரிக்கும்.சருமத்தை மென்மையாக இளக்கமாக வைத்திருக்கும். சருமத்தின் நெற்றி மீது அதிகரிக்கும் கோடுகள், சுருக்கங்களை போக்க உதவக்கூடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்