தாடைக்கு கீழ் தொங்கும் சதை அழகை கெடுக்குதா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

Report Print Kavitha in அழகு
356Shares

உடல் பருமனை சிரமப்பட்டு குறைப்பவர்கள் முகத்தில் இருக்கும் கூடுதலான கொழுப்பை குறைக்க வெகுவாக சிரமப்படுவார்கள். இது முகத்தினை அழகையே கெடுத்துவிடுகின்றது.

மாதக்கணக்கில் டயட் இருந்தால்தான் எடை குறையும். ஒருசிலருக்கு உடல் எடை குறைந்தாலும், முகத்தில் உள்ள தேவையற்ற சதையை எப்படிக் குறைப்பது எனத் தெரியாமல் தவிப்பதுண்டு.

அந்தவகையில் முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க செய்ய செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  • முக பயிற்சியின் போது கழுத்து மற்றும் கன்னத்தின் தசைகள் உணரும் வரை நாக்கை வெளியே நீட்டி 10 விநாடிகள் வைரை வைத்திருந்து பிறகு உள் இழுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.

  • சீரான இடைவெளியில் தூக்கம் என்பது ஒட்டுமொத்த எடை இழப்புக்கு குறையும். முக கொழுப்பையும் இழக்க உதவும். எடை இழப்பு முக கொழுப்பு கரைப்புக்கு இரவில் 8 மணீ நேர தூக்கம் அவசியம் ஆகிறது.

  • கார்டியோ அல்லது ஏரோபிக் உடற்பயிற்சியை இணைத்துகொள்ளலாம். தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை கார்டியோ எக்சர்சைஸ் செய்யலாம். வாரத்துக்கு 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான மற்றூம் தீவிரமான உடற்பயிற்சியை பெற முயற்சிப்பது அவசியம். இது அதிகப்படியான கொழுப்பு இழப்புக்கு உதவும்.

  • அதிக நீர் அருந்துவது அல்லது தேவையான அளவு நிறைவாக நீர் அருந்துவது. உணவுக்கு முன்பு குடிக்கும் நீர் உணவில் இருக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க செய்யும். நாள் முழுக்க உடல் கலோரிகள் எரிக்கும் போது எடை இழப்பும் சாத்தியமாகிறது. இதை உடலில் போதுமான நீர் தந்துவிடுகிறது. முக கொழுப்பை குறைக்க அதிக நீர் அருந்துங்கள்.

  • உடல்பருமனை குறைத்து முக கொழுப்பை கொண்டிருப்பவர்கள் ஆல்கஹால் பழக்கத்தை கொண்டிருந்தால் இதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஆல்கஹால் அதிகமாக வீக்கம் மற்றும் கொழுப்பை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

  • உடலில் கொழுப்பை சேமிக்க தூண்டும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை எப்போதும் தள்ளி வையுங்கள். வெள்ளை நிற மாவு, பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, சோடா மற்றும் செயற்கை இனிப்புகள், இனிப்புகள் போன்றவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை. அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு மாற்றாக முழு தானியக்களை தேர்வு செய்யுங்கள்.

  • தினசரி ஒருவருக்கு தேவையான வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு சோடியம் இருந்தால் அது உடலில் இருக்கும் தண்ணீரில் சேர்ந்து தண்ணீரை வெளியேற்றாமல் உடலில் தங்கவைக்கிறது. இது முகத்தில் கொழுப்பை அதிகரிக்கும். இதனை தடுக்க உடலுக்கு சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்