முட்டி கருப்பை எளிதில போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு
158Shares

மூட்டுகளில் கருமைகள் இருப்பதால் இளம்பெண்கள் அதிகமாகவே அவஸ்தைபடுகிறார்கள்.

இதனை போக்க கண்ட கண்ட கிறீம்களை வாங்கி தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எளிய முறையில் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காய்ச்சாத பாலுடன் பேக்கிங் சோடாவை கலந்து குழைத்து முட்டி கருப்பு இருக்கும் இடங்களில் தேய்க்கவும். வட்ட வடிவில் மசாஜ் செய்து விடவும். இயன்றவரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்து விடவும். இது முட்டி கருமையை போக்குவதோடு சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறவும் உதவுகிறது.

  • எலுமிச்சையை இரண்டாக நறுக்கி சாறை இலேசாக வெளியேற்றி நீர் அல்லது பன்னீர் கலந்து எலுமிச்சை தோலை அப்படியே சருமத்தில் முட்டியின் மீது வைத்து சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவி எடுத்தால் போதும். வாரத்துக்கு மூன்று முறையாவது இதை செய்து வந்தால் முட்டி கருமை நிறம் நீங்கும்.

  • தக்காளியை இரண்டாக நறுக்கி அப்படியே சாறோடு கை மூட்டுகளில் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே 20 நிமிடங்கள் விட வேண்டும். பிறகு மிதமான நீரில் கழுவி எடுத்தால் கருமை நீங்கும். எப்போதும் இதை செய்யலாம். தினமும் இரண்டு வேளை கூட செய்யலாம்.

  • மஞ்சளுடன் தேன் கலந்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து முட்டி மீது தடவி பற்று போல் போட்டு மசாஜ் செய்யலாம். பிறகு 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் நாளடைவில் கருமை குறையும்.

  • உருளைக்கிழங்கை நறுக்கி சாறோடு தேய்க்கலாம். அல்லது சாறை பிழிந்து அதில் சுத்தமான பஞ்சு தோய்த்து மூட்டுகள் இருக்கும் இடத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து விடவும். சாறு உலர்ந்த பிறகு மீண்டும் மீண்டும் அதை தடவி பிறகு சுத்தமான துணீயால் துடைத்து க்ரீம் வகைகளை தடவினால் போதும். கருப்பு நிறம் மறைவதோடு முட்டி சொரசொரப்பும் போகும்.

  • ஆலிவ் எண்ணெயுடன் சரக்கரை சேர்த்து குழைத்து உடனடியாக முட்டியில் தேய்க்கவும். தினமும் இதை செய்யலாம். குளியலுக்கு முன்பு இதை செய்து வரலாம். தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைவதை பார்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்