முகத்திற்கு கடலை மாவை இப்படி பயன்படுத்துங்க... ஜொலிக்கும் அழகை பெறலாம்

Report Print Kavitha in அழகு
1608Shares

அனைத்து பெண்களுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அந்த அழகை எப்படி சரியான முறையில் பராமரிக்கலாம் என்பது பற்றி பலருக்கு தெரியாது.

சில பெண்கள் சீக்கிரமாக அழகாக வேண்டும் என்று கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த க்ரீம்கள் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகள் தோன்றிவிடும்.

எனவே இதுபோன்ற பிரச்சினையில் சிக்கமால் இருக்க வீட்டில் இருக்கும் பல இயற்கை பொருட்கள் உதவி புரிகின்றது.

இதில் கடலைமாவை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல நன்மைகள் கிடைக்கின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

  • கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

  • இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

  • இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும்.

  • கடலை பருப்பு 1 டீஸ்பூன், ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்