அழகு பிரச்சனைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
1361Shares

முகத்தில் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள், முகப்பருக்கள் என எல்லாமே எல்லா வயதினருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தான்.

இதனை போக்க பலர் பல வழிகள் கிறீம்கள், கெமிக்கல் கலந்த பொருட்களை இன்றைய காலத்தில் பயன்படுத்தி வருகின்றார்.

ஆனால் இதில் எந்த பயனுமே இல்லை. நாளடைவில் வேறு சரும பிரச்சினைகளை உண்டாக்க கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி எப்படி சரும பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • தக்காளியை இரண்டாக நறுக்கி முகத்தில் மென்மையாக தேய்த்துவிடுங்கள். முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதால் முகப்பருக்கள் தீவிரமாகாமல் இருக்கும். வாரம் இரண்டு முறை இதை செய்துவந்தால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்க முடியும்.

  • உருளைக்கிழங்கை வட்ட வடிவில் வெட்டி அதை பன்னீரில் நனைத்து கண்களுக்கு மேல், கருவளையமும் படும்படி வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் மறையும். சாதாரணமாகவே வாரம் ஒருமுறை இதை செய்துவந்தால் கருவளையம் வராமல் தடுக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

  • பசுந்தயிர் எடுத்து 1 தேக்கரண்டி தயிரில் சிட்டிகை மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து முகத்தை கழுவினால் போதும் வெளியில் செல்பவர்கள் வாரம் மூன்று அல்லது இரண்டு முறை செய்தால் போதும். வீட்டில் இருப்பவர்கள், அதிகம் வெயில் படாமல் பணி செய்பவர்கள் வாரம் ஒருமுறை செய்தால் போதுமானது.

  • முட்டையை உடைத்து உள்ளிருக்கும் வெள்ளை நிற கருவை மட்டும் எடுத்து அதில் நறுமணம் தரும் லாவண்டர் ஆயில் ஒரு சொட்டு விட்டு நன்றாக கலக்கி முகத்தில் கீழிருந்து மேலாக தடவ வேண்டும். முட்டை வாடை அடிக்காதவாறு லாவண்டர் சேர்த்திருப்பதால் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பிறகு சாதாரணமான நீரில் கழுவினால் போதும். வாரம் ஒருமுறையாவது இதை செய்துவந்தால் வயதான தோற்றத்தை தள்ளிபோட முடியும்.

  • உதடுகளில் இருக்கும் இறந்த செல்களை நீக்க சர்க்கரை அல்லது ஓட்ஸ் பயன்படுத்தி உதட்டில் ஸ்க்ரப் செய்யலாம். தேனுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தலாம். வெண்ணெய் அல்லது உதட்டுக்கு நெய் தடவுவதன் மூலமும் உதட்டை வழுவழுப்பாக வைத்திருக்க முடியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்