முகத்தில் தென்படும் பருக்களை விரைவில் போக்க இதோ சில எளிய டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு
289Shares

பொதுவாக முகத்தில் பரு வந்துவிட்டால் போது தொல்லைதான். அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.

சிலர் முகத்தில் பரு வந்தாலே கைகளை வைத்து கிள்ளுவது வழக்கம். இதனால் முகத்தில் அசிங்கமான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றது.

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது முகப்பருவை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

  • கற்றாழை ஜெல்லை முகப்பருவுக்கு மேல் பயன்படுத்துவதன் மூலம் ஒரே இரவில் பருவைத் நீக்க முடியும்.
  • தேயிலை மர எண்ணெயை 2 சொட்டு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பருவில் மெதுவாக தடவவும். இது சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
  • ஒரு சிறிய க்ரீன் டீ பையை தண்ணீரில் காய்ச்சவும், பின்னர் அதனை குளிர வைக்க வேண்டும். அது குளிர்ந்தவுடன் அதனை பரு மீது வைக்கவும். ஏனெனில் கிரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.
  • முகப்பருவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் ஒன்று அல்லது இரு துளி தேனை பயன்படுத்துங்கள். காலையில் எழுந்து முகத்தை கழுவுங்கள். ஒரே இரவில் பருக்கள் மறைவதை நீங்கள் காணலாம்.
  • ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை நசுக்கி, சில துளிகள் தண்ணீரை சேர்த்து பேஸ்டாக மாற்றவும். பருவில் பேஸ்டைப் பயன்படுத்துங்கள். ஆஸ்பிரின் மாத்திரைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை சிறந்ததாக்கும். அருகிலுள்ள மருந்து கடையில் இருந்து ஆஸ்பிரின் டேப்லெட்டை வாங்கலாம்.
  • சில ஐஸ் க்யூப்ஸ்-ஐ எடுத்து அவற்றை நன்றாக துணியால் மூடி வைக்கவும். அதனை பருக்கள் மீது வைக்கவும். சருமத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்த வேண்டாம் அல்லது 20 விநாடிகளுக்கு மேல் ஒரே பகுதியில் வைத்திருக்க வேண்டாம். ஐஸ் கட்டி கொண்ட துணியை பருவின் மேல் தடவிக் கொண்டே இருங்கள். வீக்கத்தின் வலியை நீக்குவதை உணர்வீர்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.
  • தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.
  • சந்தனத்துடன் சிறிது பன்னீரை சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைந்து முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
  • ஆலிவ் எண்ணெயை இரவு நேரத்தில் முகத்தில் மசாஜ் செய்து விட்டு தூங்கினால் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும் அல்லது தொப்புளில் வைத்து தூங்கினால் முகம் பளபளப்பாகும்.
  • முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை கிள்ளாமல் அந்த இடத்தில் மஞ்சள் மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனால் பருக்கள் விரைவாக மறையும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்