பொதுவாக பழங்காலத்தில் இருந்தே பெண்கள் முக அழகை பேணி காப்பதற்கு கடலை மாவை பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு.
இதனை தினமும் முக அழகிற்கு, பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
அந்தவகையில் தற்போது கடலை மாவை எந்தவித சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
சென்சிடிவ் சருமத்திற்கு
சருமம் அழகுபெற கடலை மாவு ஃபேஸ் பேக்: ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த செய்முறையினை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு
கடலை மாவு ஃபேஸ் பேக்: கடலை மாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையினை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
சாதாரண சருமத்திற்கு
ஒரு பௌலில் கடலை மாவு 1/2 டீஸ்பூன், முல்தானி மெட்டி 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
கருமையான சருமத்திற்கு
ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு 1 டீஸ்பூன், பப்பாளி கூழ் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
இந்த முறையினை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
பொலிவிழந்த சருமத்திற்கு
ஒரு பௌலில் கடலை மாவு 1 டீஸ்பூன், தேன்1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
இந்த முறையினை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், சரும பொலிவு மேம்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் காணப்படும்.