பாதாம் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க... சரும பிரச்சினைகள் எல்லாம் போகுமாம்!

Report Print Kavitha in அழகு
1475Shares

பாதாம் எண்ணெய் வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது.

இது உங்கள் சருமத்திலிருந்து உங்களுடைய இயற்கையான பொலிவை வெளிக் கொண்டு வருகின்றது.

மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • பால் மற்றும் பாதாம் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்தலாம். இந்தக் கலவையை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தப்படுத்தவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறலாம்.
  • பழுப்புச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும். மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.
  • படிகாரத் தூள் மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும். பளபளப்பான சருமத்தைப் பெற இந்த முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்