பின்னங்கழுத்து கருப்பா இருக்கா? இதனை போக்க என்ன பண்ணலாம்?

Report Print Kavitha in அழகு
252Shares

பொதுவாக பல பெண்களுக்கு முகம் பார்க்க நல்ல வெள்ளையாக காணப்படும். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பலர் கை, கால், பின்னங்கழுத்து போன்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை.

இதில் குறிப்பாக பின்னங்கழுத்தை பராமரிக்க மறந்துவிடுவார்கள். இதனால் பின்னங்களுக்கு கருமையடைந்து காணப்படும்.

வெயில் படுவதால் உண்டாகும் கருப்பு, ஹார்மோன் சமநிலையின்மையால் சருமத்தில் படரும் கருப்பு திட்டு என்று பலவகையில் கருப்பாக காட்சியளிக்கும்.

இதிலிருந்து விடுபட ஒரு சில வீட்டில் இருக்கும் பொருட்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து நன்றாக குழைத்து பின் கழுத்து முழுவதும் ஸ்கரப் செய்ய வேண்டும். சருமம் முழுக்க படும்படி வட்டவடிவில் மெதுவாக தேய்த்தபடி மசாஜ் செய்ய வேண்டும். நன்றாக இரண்டு முறை வட்டவடிவில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் சருமத்தின் உள்ளே படிந்திருக்கும் அழுக்குகள் வெளியே வரும்.
  • இரண்டு பங்கு கடலைமாவுடன் ஒரு பங்கு மஞ்சள் சேர்த்து அதில் கற்றாழை ஜெல் அல்லது பன்னீர் சேர்த்து குழைத்து கழுத்து பகுதி முழுக்க இரண்டு முறை பிரஷ் கொண்டு அப்ளை செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு ஈரத்துணியால் அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைக்கவும். இப்போது அந்த கருமை இருக்கும் இடம் மாறி ஓரளவு பளிச் என்று இருக்கும்.
  • பேக்கிங் சோடா மற்றும் கழுத்துக்கு பேக் போட்ட பிறகு சருமத்தில் எரிச்சல் வராமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்தலாம். அல்லது சன்ஸ்க்ரீன் இருந்தாலும் உபயோகிக்கலாம். வாரம் இரண்டு முறை இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பின்னங்கழுத்து கருமை மறையக்கூடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்