முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை! இந்த பொருளுடன் பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள்.

ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

இதில் நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், தாமிரம், மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.

கொய்யா இலைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

இது சருத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கு முகத்திற்கு புத்துணர்ச்சியை தருகின்றது.

அந்தவகையில் கொய்யா இலைகளை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • கொய்யா இலை-10
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
  • பால்- 3 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
செய்முறை

கொய்யா இலையை சுத்தப்படுத்தி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும்.

இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்