அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? அதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள்.

அக்குள் கருப்பாக உள்ளது என்று நம்மில் சில பெண்கள் அதிக அளவில் வருத்தப்படுவதுண்டு.

இதனை தடுக்க கண்ட கண்ட கிறீம்களை பூசுவதை தவிர்த்து விட்டு கீழ் காணும் இயற்கை பொருட்களை கொண்டு எப்படி அக்குள் கருமையை போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

  • குளிப்பதற்கு முன் இரண்டு மூன்று நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் அரை எலுமிச்சை பழத்தை அக்குள் பகுதியில் தேய்த்துக் கொள்ளுங்கள். மிக விரைவிலட அக்குள் பகுதியில் கருமை மாறும்.
  • ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஒரு தேக்கரண்டி பழுப்பு சர்க்கரையுடன் கலக்கவும். அதை இரண்டு நிமிடங்கள் துடைத்து, பின்னர் சில நிமிடங்கள் விட்டு விடுங்கள். இப்போது, அதை சாதாரண தண்ணீரில் கழுவவும்.
  • தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் கலந்து இந்த கலவையை உங்கள் அக்குளில் தடவவும். இப்போது அதை ஐந்து நிமிடங்கள் விட்டுவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • உங்கள் அக்குளில் தேங்காய் எண்ணெயை ஊற்றி தினமும் மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவுங்கள். மிக விரைவிலையே கருமை நீங்கி சருமம் ஒளிரும்.
  • பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஒரு தடிமனான பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இப்போது, இந்த பேஸ்ட்டை உங்கள் அக்குள் பகுதியில் வாரத்திற்கு இரண்டு முறை தடவி, அக்குளை துடைக்கவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்தபின், கலவையை கழுவவும், அந்த பகுதியை உலர வைக்கவும்.
  • தினசரி தக்காளியை ஒரு துண்டு வெட்டி அக்குள் பகுதியில் தேய்க்கவும். தக்காளி சாற்றை ஒரே இரவில் பயன்படுத்துவதும் உதவும்.
  • மஞ்சளை எலுமிச்சை சாறுடன் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து அக்குள் பகுதியில் இதை 12-15 நிமிடங்கள் தடவி தண்ணீரில் கழுவ வேண்டும். மிக விரைவாக இதற்கான பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்