மூக்கில் Blackheads வராமல் தடுக்க வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்

Report Print Kavitha in அழகு

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சினை பிளாக் ஹெட்ஸ்தான். அதை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும்.

சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக்கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது.

தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
  • அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
  • ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
  • நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
  • கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
  • அரை கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்