உங்களுக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கா? அதனை போக்க இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பாருங்க!

Report Print Kavitha in அழகு
1611Shares

இன்று முடி கொட்டுவது அனைவருக்குமே ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

முடி அதிக அழுக்காக இருந்தால் தலையில் பேன், பொடுகு போன்றவற்றை உருவாக்க கூடும். எனவே, வாரத்திற்கு 2 முறை தலைக்கு குளியுங்கள்.

இல்லாவிடின் தலையில் அதிகமாக அழுக்கு சேர்ந்தால் முடி கொட்டும் பிரச்சினை தொடக்கி விடும். இது நாளடைவில் வழுக்கை பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • 1 முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும்.இதை முடியை சிக்கில்லாமல் சீவி முடியின் நுனியிலிருந்து வேர்ப்பகுதி வரை தடவி தலையை பேக் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து இலேசான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.
  • 1 தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து பால் பிழியவும். அதை இலேசாக சூடுபடுத்தி 3 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ்பூன் மிளகுப்பொடி கலந்து மிதமான சூடு இருக்கும் போதே கூந்தலின் வேர்ப்பகுதி முதல் அடிப்பகுதி வரை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும்.
  • வெந்தயத்தை முன் தினம் ஊறவைத்து அந்த நீரிலேயே அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். பிறகு இதை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு அலச வேண்டும். வெந்தயம் ஊறவைத்து தலைக்கு குளிப்பதாக இருந்தால் ஷாம்பு பயன்படுத்தாமல் தலைக்கு குளிக்க வேண்டும்.
  • 10 வெங்காயம் எடுத்து நசுக்கி சாறாக்கி நீர் சேர்க்கமால் அந்த சாறை வெள்ளைத்துணியில் பிழிந்து பஞ்சில் தோய்த்து தலையில் ஒற்றி எடுத்தால் முடி குறைவாக, ஸ்கால்ப் தெரியும் பகுதியில் அதிகப்படியாக சாறு தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்துவந்தால் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி இருக்கும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்த வேண்டும்.
  • நெல்லிப்பொடியை எலுமிச்சை சாறு கலந்தும் பயன்படுத்தலாம். இதை கூந்தலின் வேர் முதல் நுனிவரை தடவி 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் மைல்டான ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும்.
  • ஒரு கப் வெந்நீரில் 3 அல்லது 4 டீ பேக் போட்டு கலக்கவும். உங்கள் கூந்தல் அளவுக்கேற்ப கூடுதலாகவோ அல்லது குறைத்தோ எடுத்துகொள்ளலாம். இவை குளிர்ந்ததும் கூந்தலின் மீது ஊற்றி மசாஜ் செய்யவும். கூந்தல் முழுமைக்கும் க்ரீன் டீ சாறு படர வேண்டும். பிறகு கூந்தலை குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்