குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி நொடியில் போக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் சருமம் அதிகம் வறட்சியடைந்து காணப்படும்.

பெண்களுக்கு சரும வறட்சியின் காரணமாக தோல் பரப்பில் திட்டு திட்டாக இருக்கும். சருமம் மற்றும் கூந்தலில் ‘இன்டெக்ரல் லிப்பிட் லேயர்’ என்ற படிமம் தான் நீர்ச்சத்தைப் பாதுகாக்கிறது.

குளிர்காலத்தில் இந்தப் படிமம் பாதிக்கப்படும். அதனால் தான் சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி குளிர்க்காலத்தின் ஆரம்பத்தில் சருமமும், இறுதியில் கூந்தலும் பாதிக்கப்படும்.

அந்தவகையில் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் முடி உதிர்வு போன்றவற்றில் இருந்து விடுதலை பெற உதவும் சில அற்புத குறிப்பிக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

affderm
 • சந்தனம், மஞ்சள், மருதாணியை அரைத்து, பாதங்களில் தடவிவர வெடிப்புகள் மறையும். தினமும் கிளசரின் தடவி, மறுநாள் காலை கழுவினால், ஒரே வாரத்தில் பாத வெடிப்புகள் மறைந்து விடும். இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பாதங்களில் தடவலாம்.
 • ஊறவைத்த பாதாமை அரைத்து இளஞ்சூடான பாலில் கலந்து, முகம் முழுவதும் பூசலாம். சருமம் பளபளக்கும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் காணாமல் போகும்.
 • சந்தனத்தூள், ஜாதிக்காய்தூள் இவற்றைப் பன்னீருடன் கலந்து, கண்ணைச் சுற்றிப் பூசலாம். கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து, கண்களைச் சுற்றி பூசிவர, ஒரே வாரத்தில் கருவளையம் மறையும்.
 • குளிக்கும் நீரில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு குளிக்கலாம். குளித்தவுடன் வெண்ணெயோ, நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ உடலில் தடவிக்கொள்ளலாம். இது உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.
 • இளஞ்சூடான பாலை முகத்தில் தினமும் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து, கரும்புள்ளிகளின் மீதும், துளசி, வேப்பிலை, மஞ்சள் கலந்து பருக்களின் மீது தடவலாம்.
 • உடலுக்குத் தேவையான 8 அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.முடியில் தடவத் தேவை இல்லை. முட்டையைப் பச்சையாக சாப்பிட்டால், முடிஅதிகம் கொட்டத்தொடங்கும்.
 • பச்சை முட்டையில் அவிடின் இருப்பதால், பயோட்டினை அழித்துவிடும். வேகவைக்கும்போது அவிடின் அழிக்கப்படுவதால், பயோட்டின் பாதுகாக்கப்படும்.
 • தீட்டப்பட்ட அரிசியைத் தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் முடி நன்றாக வளரும்.
 • வைட்டமின் H நிறைந்த வேர்க்கடலை, ஈஸ்ட், கோதுமை, மீன், முட்டை, அவகேடோ, கேரட், பாதாம், வால்நட், காலிஃப்ளவர் தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
 • வேப்பிலை சேர்த்த நீரைக்கொண்டு கூந்தலை அலசலாம்.
 • மிளகு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து, கூந்தலில் தடவி, சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டை 15 நிமிடங்கள் வரை தலையில் சுற்றிவைத்து பிறகு அலசலாம். இதனால் கூந்தலுக்குப் பளபளப்பும் மென்மையும் கிடைக்கும்.
 • சிகைக்காய், பச்சைப் பயறு மாவை சேர்த்து, சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து, கூந்தலில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
 • வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கூந்தலில் பேக் போட்டு சிகைக்காய் போட்டு அலசலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்