உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகா மாறணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு

பொதுவாக எல்லா பெண்களும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதற்காக பலர் இன்று பல பல வழிமுறைகளில் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

இதற்கு செயற்கையாக தயாரிக்கப்படும் கிறீம்களை தவிர்த்து இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் அழகினை பெற முடியும்.

அந்தவகையில் தற்போது உச்சி முதல் பாதம் வரை அனைத்தும் அழகு பெற கீழ் கண்ட முறைகளை பின்பற்றவும்.

stylecraze
  • தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளை கலந்து அதனுடன் பாசிப்பயறு மாவையும் கலந்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • ஆரஞ்சிப்பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
  • முகத்தில் உள்ள முடிகளை போக்க எலுமிச்சை பழத்தை முகத்தில் போட்டு தினமும் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து, சருமம் வளவளப்பாக அழகாக காட்சியளிக்கும்.
  • முடியில் உள்ள எண்ணெய் பசை நீங்க, முட்டையின் வெள்ளை கருவுடன் சர்க்கரை சேர்த்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் எண்ணெய் பசை நீங்கும்.
  • வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டிய தேயிலை பொடியை அரைத்து தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
  • ஆப்பிள் பழத்தை நன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை மறைந்து சருமம் பருக்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்