முழங்கால் கருப்பாக அசிங்கமாக இருக்கா? இதனை எப்படி போக்கலாம் தெரியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இன்றைய பெண்கள் என்னத்தான் பெண்களுக்கு முகம் கழுத்து அழகாக காணப்பட்டாலும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பாகவே காணப்படும்.

இதற்கு என்னத்தான் கிறீம்கள் போட்டாலும் இது நிரந்த தீர்வினை தராது.

அந்தவகையில் அழகை கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க கூடிய சில அழகு குறிப்புக்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

Google
  • எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் மற்றும் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.
  • முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.
  • தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
  • பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.
  • கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.
  • பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
  • கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.
  • எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.
  • கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்