வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது

இதற்கு விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை விட்டு விட்டு இதற்கு சிறந்த தீர்வான வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்தினாலே போதும்.

இந்த மாத்திரைகள் உங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி உங்கள் முடியைப் பளபளக்கச் செய்கிறது.

அந்தவகையில் வைட்டமின் ஈ மாத்திரைகளுடன் மற்றும் சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் முடி உதிர்தலைத் தடுத்து அடர்த்தியாகச் செய்யலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

வைட்டமின் ஈ மற்றும் பாதாம் எண்ணெய்

2 வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெயை வெளியே எடுத்து பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் கலக்குங்கள்.

இந்த கலவையை முடி முழுவதும் தடவி ஒரு நாள் இரவு வரை விட்டுவிடுங்கள்.

அடுத்த நாள் காலையில் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.

வைட்டமின் ஈ மற்றும் முட்டை

2 முட்டைகள், 2 தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெய்யை வெளியே எடுத்து முட்டை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் அனைத்தும் நன்றாக ஒன்றோடு ஒன்று மிக்ஸ் ஆகும் வரை கலந்து கொள்ளுங்கள்.

தலை முடியில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

வைட்டமின் ஈ மற்றும் கற்றாழை

கற்றாழை ஜெல் சிறிதளவு, இரண்டு தேக்கரண்டியளவு வினிகர் , இரண்டு வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு தேக்கரண்டியளவு கிளிசரின், ஒரு முட்டை எடுத்து அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.

இந்த கலவையைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்யுங்கள். பின்னர் அரை மணி நேரத்திற்கு ஷாவ்ர் கேப் கொண்டு மூடி வையுங்கள்.

அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள்.

வைட்டமின் ஈ மற்றும் ஜோஜோபா எண்ணெய்

மூன்று தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய், மூன்று தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல், மூன்று தேக்கரண்டியளவு வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்து ஒரு பேஸ்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதனை முடியில் தேய்த்து 45 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

வைட்டமின் ஈ மற்றும் அவோகேடா

இரண்டு வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு துண்டு வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெய்யை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதைத் தலை முடியில் தடவி கொண்டை இட்டு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள்.

வைட்டமின் ஈ மற்றும் ரோஸ்மேரி

சிறிதளவு நறுக்கிய ரோஸ்மேரி, 5 முதல் 6 தேக்கரண்டியளவு பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், 1 முதல் 2 வைட்டமின் ஈ மாத்திரைகளின் எண்ணெய் எடுத்து அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் நனைத்து முடியின் வேர்களில் படும்படி தேயுங்கள்.

பின்னர் சிறிது நேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள். இது உங்கள் முடியின் வளர்ச்சியை உறுதியாக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers