முகப்பரு தழும்பை முழுமையாக குணமாக்க இதனை செய்தால் போதுமே!

Report Print Kabilan in அழகு

முகப்பருவினால் தோன்றிய தழும்பை போக்க எலுமிச்சைப்பழம் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

முகத்தில் தோன்றிய பருக்கள் நீங்கினாலும், அவை இருந்த இடம் தழும்பாக மாறி விடும். அதனை சரிசெய்ய எலுமிச்சைப்பழம் மிகச்சிறந்த ஒரு மருத்துவ பொருளாகும்.

இதற்காக எலுமிச்சையை பிழிந்து, அதன் சாறுடன் ஒரு தேக்கரண்டி சுடுநீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரவு தூங்க செல்லும் முன்பாக, காட்டன் துணியை எடுத்து அந்த நீரில் முக்கி எடுத்து முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன்மூலம் முகத்தில் படியும் பாக்டீரியா கிருமிகள் அழிந்துவிடும்.

பின்னர் முகம் பொலிவு பெறும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டுவிடலாம்.

இதர வழிகள்

கொத்தமல்லி இலைகளை சாறெடுத்து, அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதனை இருவேளை முகத்தில் தடவி வர, சருமம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தொந்தரவும் குறையும்.

சருமம் பொலிவு பெற துளசியும் அருமருந்தாகும். ஒரு கைப்பிடி துளசியுடன் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு குழைத்து முகத்தில் பூசி, உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும். இதன்மூலம் சருமம் பொலிவு பெறும்.

மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவுவதுடன், முகப்பரு பிரச்னைகளையும் தீர்க்கும்.

ஜாதிக்காய், முகப்பருக்கள் நீங்கிய இடத்தில் இருக்கும் தழும்பை போக்கவல்லது. தேங்காய் பாலில் ஜாதிக்காயை அரைத்து, இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முகத்தில் தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் நன்கு முகத்தை கழுவ, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்