சருமம் மற்றும் தலை முடியை பாதுகாக்க இந்த ஒரு பழம் மட்டுமே போதுமே!

Report Print Kavitha in அழகு

இன்றைய கால பெண்களின் பிரச்சனையாக இருப்பது முகப்பரு மற்றும் தலை முடிப் பிரச்சனையும் தான்.

இதற்காக பெண்கள் பல வழிகளில் இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

அதிலும் சிலர் விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட செயற்கை மருந்துகளையும் , கிறீம்களும் வாங்கி பூசி தங்களது அழகை கெடுத்து கொள்கின்றனர்.

அந்தவகையில் இதற்கு இயற்கை முறையில் பல தீர்வுகள் உள்ளனது.

அதில் திக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ள கிரான்பெர்ரி சரும பிரச்சினைக்கும் தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வளிக்கின்றது.

தற்போது கிரான்பெர்ரி வைத்து எப்படி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என பார்ப்போம்.

  • கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து அதில் காட்டனை நனைத்து முகத்தில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவுங்கள். இது எண்ணெய் வடிவதை தடுத்து முகப்பரு வராமல் பாதுகாக்கிறது.

  • சிறிதளவு கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் கடலைமாவு எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் மாஸ்க் போல் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இழந்த சருமத்தின் நிறத்தை திருப்பி தரும்.

  • கிரான்பெர்ரி ஜூஸ் உடன் தயிர் எடுத்து கலக்கி கொள்ளுங்கள். முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் தினமும் செய்யலாம். ஏனெனில் இதில்அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதால் இவை வறண்ட மற்றும் தொய்வான சருமத்தை ஏற்படுத்தும்.

  • கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். அதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

  • கிரான்பெர்ரிகளின் ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனை முட்டையின் வெள்ளை கருவில் கலந்து உங்கள் முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். மேலும் இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

  • கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் ஒரு கப் மயோனைஷ் எடுத்து கலந்து கொள்ளுங்கள். முடியின் வேர்களில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முடி பளபளப்பாக மாற்றி விடும்.

  • சுத்தமான கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி உங்கள் முடியின் மேல் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் அடிக்கடி செய்தால் உங்கள் முடி இயற்கையான முறையில் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்