40 வயதிலும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்!

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்கள் 40 வயது தாண்டியாலே முகம் மற்றும் உடலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுகின்றது.

இதனை மறைப்பதற்காக சிலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்கள் மற்றம் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதுண்டு.

இதனை தவிர்த்து இதற்கு இயற்கை முறைகளில் பல வழிமுறைகள் உள்ளது. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஐந்து துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தயிர் முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவாகும்.

  • ஒரு லிட்டர் நீரை லேசாகச் சூடாக்கி அதில் 20 கிராம் சாமந்திப்பூ சேர்த்து மூடி வைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்நீரில் முகம் கழுவினால் முகம் பொலிவாகும்.

  • வெள்ளாரிக்கால் ஜூஸ் சிறிதளவு அல்லது ரோஸ் வாட்டரை நீரில கலந்து முகத்தில் தடவினால் முகம் பிரகாசமாகும்.

  • பட்டர் இரண்டு டீஸ்பூன் அல்லது கோகோ பட்டரை லேசாகச் சூடாக்கி ஆறவைத்து பிறகு அதனுடன் சிறிதளவு கற்றாழைச் சேர்த்துக் கலக்கவும். இதை முகத்தில் தடவினால் பிசுபிசுப்பு நீங்கி எண்ணெய் சருமம் பொலிவாகும்.

  • இரண்டு டீஸ்பூன் ஓட்ஸை எடுத்து கால் கப் நீரில் வேகவைக்கவும். அதனுடன் சிறிதளவு பால் சேர்த்துக் கலந்து முகம் மற்றும் உடல் பகுதி முழுக்க தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் பளபளப்பாகும்.

  • செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து குளித்து வந்தால் 40 வயதிலேயே உடல் சுருக்கம் ஏற்படுவது தடைப்படும்.

  • ஆலிவ் ஆயில் நான்கு டீஸ்பூன் அல்லது செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன் எடுத்து லேசாகச் சூடுப்படுத்தி அதனுடன் சக்கரை நான்கு டீஸ்பூன் சேர்த்து கலக்கி கொள்ளவும். அதை முகம் மற்றும் உடல் பகுதியில் தடவு குளித்து வரவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்