உங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ சில அற்புத தீர்வுகள்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக் தலை வியர்க்கும் தன்மை இருக்கும். இதனால் அதிகம் வியர்ப்பதால் தலையில் கடுமையாக துர்நாற்றம் வீசும்.

அதுமட்டுமின்றி தலையில் பொடுகு இருந்தால், அதுவும் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும்

இதனால் அருகில் இருப்பவர்களுக்கு கூட சிரமமாக இருக்கும்.

இதற்காக சிலர் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நறுமண பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் அவை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதற்கு இயற்கை பொருட்களைக் கொண்டு முடியை நறுமணத்துடன் வைத்துக் கொண்டால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.

அந்தவகையில் முடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.

  • 3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.
  • டீ-ட்ரீ எண்ணெயை நீரில் கலந்து, அந்த நீரினால் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து மைல்டு ஷாம்புவால் அலசுங்கள்.
  • தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்காப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையால் தலையை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், தலையில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
  • தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, பின் இந்த எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.
  • ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers