உங்கள் தலை முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறனுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இந்த காலகட்டத்தில் கடும்வெயில் காரணமாகவும் மாசு, தூசு போன்றவற்றால் சரும பாதிப்பு மட்டுமின்றி கூந்தல் பாதிப்பும் ஏற்பட்டு விடுகின்றது.

இதனால் கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது.

உங்கள் கூந்தலை வலிமையாக்க கண்டிஷன் பெரிதும் உதவி புரிகின்றது. அதற்கான முக்கிய மூலபொருள் ஜெலட்டின் பவுடர் ஆகும்.

அந்தவகையில் ஜெலட்டின் பவுடர் பயன்படுத்தி தலை முடியை வலிமையாக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • தூள் செய்யப்பட்ட ஜெலட்டின் - ஒரு ஸ்பூன்
  • பால் அல்லது தண்ணீர் - 1/2 கப்
  • ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
  • முட்டை (வெள்ளை மற்றும் மஞ்சள் கரு) - 1
  • ஹேர் கண்டிஷனர் (அல்லது 2-3 ஸ்பூன் அவகாடோ விழுது - அதிக ஈரப்பதத்திற்கு) - . 2 ஸ்பூன்
  • ஆப்பிள் சிடர் வினிகர்(தேவைப்பட்டால்) - 1 ஸ்பூன்
செய்முறை

பால் அல்லது தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கி, அதில் ஜெலட்டின் பவுடர் சேர்த்து ஒரே சீராக கலந்து கொள்ளவும்.

பிறகு அந்தக் கலவையில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் , ஒரு முட்டை , உங்கள் ஹேர் கண்டிஷனர் அல்லது அவகாடோ விழுது ஆகியவற்றைக் கலந்து மீண்டும் நன்றாகக் கலக்கவும்.

தேவைபட்டால் ஏதாவது ஒரு அத்தியாவசிய எண்ணெய் சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த மாஸ்க் தயார்.

நன்றாக அலசிய கூந்தலில் இந்த மாஸ்கை தடவவும். தடவுவதற்கு முன் தலைமுடியை நான்கு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஜெல் தடவும் முறையில் தடவவும்.

இந்த கலவையை எல்லா இடங்களிலும் படும்படி நன்றாகத் தடவவும்.


ஒவ்வொரு பாகத்திலும் தடவும்போது விரைவாகத் தடவ வேண்டும். இல்லையேல் இந்த ஜெல் எளிதில் கடினமாக மாறிவிடக் கூடும்.

தடவியபின், தலை முடியை மென்மையாக சீவிவிடுங்கள். ஒரு முறை ஒரு பாகம் முழுவதும் ஜெல் தடவி சீவி முடித்தவுடன் மீண்டும் அதில் கை வைக்க வேண்டாம். அடுத்த பாகத்திற்கு சென்று அதே முறையைப் பின்பற்றவும்.

முழுவதும் தடவி முடித்தவுடன் இருபது நிமிடங்கள் அப்படியே விடவும்.

சிறிது நேரத்தில் அந்த ஜெல் சற்று காய்ந்து, கடினமாகி விடக்கூடும். நன்றாக காய விடவும்.

ஓரளவிற்கு தலைமுடி காய்ந்தவுடன் , வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையை அலசவும்.

விரல்களைக் கொண்டு தலையில் தேய்க்க வேண்டாம். தண்ணீர் நேரடியாக தலையில் படும்படி ஊற்றவும்.. இப்படி செய்வதால் நீங்கள் தொடுவதற்கு முன்பு தானாகவே உங்கள் கூந்தல் மிருதுவாகும்.

உங்கள் தலைமுடி மிருதுவாக மாறியவுடன், தலையை மென்மையாக மசாஜ் செய்து, பிறகு கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

இந்த புரத சிகிச்சைக்கு பின் தலை முடியை ஆழமாக கண்டிஷன் செய்வதால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையைப் பின்பற்றுவதால் உங்கள் தலை முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்