உங்கள் நெற்றியில் விழும் சுருக்கங்களை மறைக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நெற்றியில் சுருக்கங்கள் ஏற்பட்டு விடுகின்றது.

இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்ட எளிதில் சரி செய்ய முடியும் தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • வாழைப்பழம் - 1
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1டேபிள் ஸ்பூன்
செய்முறை

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை.

அவைகளில் உள்ள தேவையான சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்