பட்டு போல் பாதத்தை அழகாக்க வேண்டுமா ? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

சிலருக்கு என்னத்தான் கால்கள் அழகாக இருந்தாலும் பாதங்கள் கரடு முரடாய், வெடிப்புடன் காணப்படும்.

இதற்காக பியூட்டி பாலர்கள் சென்று தான் பெடிகியூர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டும் பாதங்களை அழகாக்க முடியும்.

இதற்கு வெறும் 5 நிமிடம் தினமும் செலவழித்தால் போதும் பாதங்கள் பட்டு போன்று மென்மையாகும்.

தற்போது இந்த பேக்கை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • வெள்ளை சர்க்கரை - 1 கப்
  • சமையல் சோடா- 2 ஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
  • தேன் - 2 ஸ்பூன்
  • ஜுஜுபா எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • வாசனை எண்ணெய் ( பாதாம், லாவெண்டர்) - சில துளிகள்.
செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை போடுங்கள். அதில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்குங்கள். பிறகு சமையல் சோடா சேர்க்கவும்.

பின் நன்றாக கலந்த பின் தேனை சேருங்கள். நன்றாக கலந்தபின் ஜுஜுபா எண்ணெய் மற்றும் வாசனை எண்ணெய் கலக்கவும்.

குளிப்பதற்கு முன் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். கால்களில் வட்ட வடிவில் தேய்க்கவும். கடினமான பகுதிகலில் அதிக கவனம் செலுத்துங்கள்.

5 நிமிடம் இதனைக் கொண்டு ஸ்க்ரப் செய்த பின் குளிக்கவும். சோப் எதுவும் போட வேண்டாம். இது ஈரப்பதம் அளிக்கும். தினமும் இவ்வாறு செய்தால் பாதங்கள் மிருதுவாகி வெடிப்பின்றி காட்சியளிக்கும்.

இந்த ஸ்க்ரபை கைகளுக்கும் உபயோகபடுத்தலாம். இதனை கைகளுக்கு பயன்படுத்தும் போது கைகளில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள் அகன்று மிருதுவாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers