கருப்பாக இருப்பதனால் வருத்தமா?.... இதோ உங்களுக்கான அழகு குறிப்பு

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்கள் இயற்கையாகவே கருப்பாக காணப்படுவார்.

உண்மையாக நமது சருமம் கருமையாக இருப்பதற்கு நம் சருமத்தில் உள்ள நிறமியான மெலனின் அளவு தான் காரணமாக இருக்கின்றது.

சிலருக்கு இந்த மெலனின் அளவு அதிகமாக இருக்கும். அத்தகையவர்கள் கருப்பாக தோற்றமளிப்பார்.

இதனால் சில கருப்பாக இருக்கும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் உண்டு.

என்னத்தான் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனங்கள் பயன்படுத்தினாலும் சீக்கிரம் வெள்ளையாகுவது என்பது கடினமாகும்.

அதற்கு நாம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கருப்பான இருக்கும் பெண்கள் எளிதில் வெள்ளையாக முடியும். தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • ஒரு பௌலில் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வெயிலால் கருமையான சருமத்தைப் போக்கலாம்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான பாலில் கழுவி வந்தாலும், சருமம் பொலிவோடு இருக்கும்.
  • தினமும் தேனை முகத்தில் தடவி உலர வைத்து, ஈரமான காட்டனால் துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • 1 தக்காளியை அரைத்து, அதனை ஈரமான சருமத்தில் தடவி உலர வைத்து, பின் மீண்டும் தடவி உலர வைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவதோடு, முகத்தில் வளரும் தேவையற்ற முடியையும் தவிர்க்கலாம்.
  • ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து, அதனை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து, அதனை தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், இயற்கையான பொலிவு கிடைக்கும்.
  • 3 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உலர்ந்ததும் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் நல்ல பலனைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்