சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்க வேண்டுமா?

Report Print Kavitha in அழகு

முக அழகினை பெற இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ கிறீம்கள் இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. அதில் கொய்யா சிறந்த பழமாக கருதப்படுகின்றது.

கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.

தற்போது கொய்யா பழத்தினை வைத்து சரும பொலிவை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • ஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி
  • முட்டை மஞ்சள் கரு - 1
  • தேன் - 1 மேசைக்கரண்டி
  • கொய்யா - ½ பழம்
செய்முறை

முதலில் கொய்யாவை எடுத்த சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.

இந்த ஃபேஸ் பேக் செய்து வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்