பாத வெடிப்பில்லாத அழகான கால்களை பெற வேண்டுமா?

Report Print Kavitha in அழகு

பெண்களுக்கு பாத வெடிப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன.

இது பாதத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது. இதற்காக பியூட்டி பாலர்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

வெடிப்பில்லாத அழகான கால்களை பெற வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் ஃப்யூமிக் கல்லினால் தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.
  • தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
  • வெள்ளை வினிகருடன் சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையினுள் குதிகாலை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் குதிகால் வெடிப்பு மறையும்.
  • ஆப்பிள் சைடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனுள் கால்களை ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும் இதனால் அதில் உள்ள கிருமிகள் தாக்கம் குறைந்து வெடிப்பு குறையும்.
  • ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, ஃப்யூமிக் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால் வெடிப்பு மறையும். வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.
  • அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக, வெடிப்பின்றி இருக்கும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சம அளவு கலந்து அதில் சுண்ணாம்பு சிறிது மற்றும் மஞ்சள் கலந்து பாதத்தில் பூசி வந்தால் ஒரு வாரத்தில் பாத வெடிப்பு மறையும்.
  • வீடுகளில் குளிர்ந்த தரையில் பாதம் பட்டுக் கொண்டிருந்தால் வெடிப்பு இன்னும் அதிகப்படுத்தும். ஆகவே வீட்டில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers