சரும நிறத்தை அதிகரிக்க தினமும் இரவில் இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

சரும நிறத்தினை அதிகரிக்க சந்தையில் எத்தனை பொருட்கள் வந்தாலும் இயற்கை முறையை கையாளுவதே சிறந்ததாகும்.

அந்தவகையில் இரவுகளில் திசுக்கள் புதிதாக உருவாவதால் இரவில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தினால் மட்டும் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • காய்ச்சாத பாலை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகம் கழுவி விடுங்கள். எல்லா சருமத்திற்கும் இது பொருத்தமாக இருக்கும்.
  • வெள்ளரிச் சாறுடன் சிறிது பால கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவவும். தினமும் செய்ய வேண்டும்.
  • உருளைக் கிழங்கின் சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுங்கள். 5 நிமிடங்களில் கழுவ வேண்டும்.
  • அரை டீ ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யுங்கள். பின் முகத்தை கழுவிவிடுங்கள். இப்படி செய்தால் முகத்தின் நிறம் மாறும்.
  • தயிரில் சிறிது கடலை மாவை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.
  • தேங்காய் நீரை முகத்தில் தடவியபின் காய்ந்ததும் கழுவி விடுங்கள். இது சருமம் ஜொலிக்க வைக்கும். முகமும் நிறம் பெறும்.
  • உங்களுக்கு எண்ணெய் அல்லது நார்மல் ஸ்கின்னாக இருந்தால் தக்காளியை அப்படியே பயன்படுத்தலாம். காய்ந்ததும் கழுவ வேண்டும். சருமம் நல்ல நிறம் பெறும். வறண்ட சருமம் இருந்தால் தக்காளி சாறுடன் தேன் கலந்து தடவுங்கள்.
  • பால் பவுடர், பப்பாளி, மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் கலக்கி முகத்தில் பேக் போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ மூன்றையும் அரைத்து உடலில் பூசி குளித்து வரவேண்டும். ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். சரும நிறம் அதிகரிக்கும்.
  • நல்ல தரமான குங்குமப் பூவை வாங்கி பாலில் சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பாலின் நிறம் மாறும். பின்னர் குங்குமப் பூவை நன்றாக மசித்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவலாம்.
  • தினமும் 1 செம்பருத்தி பூ சாப்பிட்டு வந்தால் செம்பருத்திப் பூவிலுள்ள தங்கச் சத்து உடலுக்கு கிடைக்கும். உடலும் தங்க நிறம் பெறும்.
  • புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
  • கடுகு எண்ணெயை காய்ச்சி அதில் மஞ்சள் கலந்து முகத்தில் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவலாம். அல்லது இரவு தூங்குவதற்கும் முன் கடுகு எண்ணெயை பூசிவிட்டு படுக்கவும். வெயில்காலத்தில் பயன்படுத்த வேண்டாம்.
  • சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து ஆர வைத்துக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் இந்த நீரினால் முகத்தை கழுவிட்டு செல்லுங்கள். இவை சரும நிறத்தை கூட்டும்.
  • கேரட் எண்ணெய் வாங்கி தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சருமத்தில் தேயுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இது ஒரு சில வாரங்களில் சருமப் பொலிவை காண்பிக்கும்.
  • சந்தனக் கட்டையில் எலுமிச்சை சாறினை உரசி அதனை பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும். முகமும் நல்ல நிறம் பெறும்.
  • ஆரஞ்சு பழத்தை பொடி செய்து அதனை பாலுடன் கலந்து பூசி வர வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்தாலே சரும நிறத்தில் நல்ல மாற்றம் தோன்றும்.
  • ஆவாரம் பூவை தினமும் தூங்குவதற்கும் சாப்பிட்டு படுத்தால் உடல் தங்க நிறம் பெறுமாம். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers