உங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்கணுமா? இதோ சூப்பர் பேஸ் மாஸ்க்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து காணப்படும்.

குறிப்பாக பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என பலவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.

அந்தவகையில் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. தற்போது அதில் சருமத்தை எப்போதும் பளிச்சென்று மாற்ற கூடிய இயற்கை பேஸ் மாஸ்க் ஒன்றை இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
  • முட்டையின் வெள்ளைக் கரு- 1
  • தேங்காய் எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்
  • தேன் - அரை ஸ்பூன்
செய்முறை

முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.

அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் தயார்.

இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும்.

பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்