பொடுகை மாயமாக மறைய செய்ய வேண்டும்? இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

இன்று பலரும் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதுவே பொடுகு என்று சொல்லப்படுகின்றது.

இதனை இயற்கை வழிகளின் மூலம் பொடுகைப் போக்க முயற்சித்தால், பொடுகு நீங்குவதோடு, முடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியமும் மேம்படும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • முதலில் தலைமுடியை நீரில் அலசி, பின் 2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, ஈரத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி துணியால் தலையைச் சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

  • 6 டேபிள் ஸ்பூன் நீரில், 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, தலையில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதன் மூலமும் பொடுகைப் போக்கலாம்.

  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச முடி உதிர்வது குறைந்து, பொடுகும் நீங்கும்.

  • தயிரை தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகு நீங்குவதோடு, முடியின் மென்மையும் அதிகரிக்கும்.

  • ஆலிவ் ஆயிலில் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, அக்கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலச, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

  • சந்தன எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச, பொடுகு நீங்கும்.

  • வாரம் ஒருமுறை சல்பர் பவுடர், பாதாம் எண்ணெய் மற்றும் சிறிது ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தேய்த்து ஊற வைத்து அலச, பொடுகு மறையும்.

  • இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகு நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...