அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

புருவங்கள் என்பது கண்களுக்கு மேற்புறத்தில் செறிவான, மெல்லிய முடிகளையுள்ள பகுதியைக் குறிக்கும். வியர்வை, நீர், பிற மாசுகள் கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் பணியாகும்.

முகத்திற்கு அழகை தருவதில் புருவங்களுக்கு என்றே தனியிடம் உள்ளது.

நம்மில் சிலர் புருவங்களை பென்சில் கொண்டு வரைந்து கொள்வார்கள். இன்னும் சிலர் இதற்காக நிறைய பணம் செலவழித்து சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

புருவங்கள் செயற்கையாக வளருவதற்கும் இன்று கடையில் பலவகை இரசாயனங்கள் கலந்த கலவைகளும் உள்ளன. இருப்பினும் இது நிறந்த அழகினை தராது.

அந்தவகையில் இதனை எல்லாம் தவிர்த்து வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அடர்த்தியான புருவங்களைப் பெறலாம். தற்போது இவற்றில் சில இயற்கை குறிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.

  • தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். ஏனெனில் பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஏராளமாக உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
  • கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.
  • தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, மயிர்கால்களில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, புருவங்கள் நன்கு வளரும்.
  • விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர, புருவங்களில் உள்ள முடி நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தாலே, நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து, புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருப்பதைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...