உங்கள் கைகள் பட்டுப்போல் மாறணுமா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

வெயிற்காலங்களும் குளிர்காலங்களும் சிலருக்கு கைகள் செரசெரப்பாக வறட்டு போய் காணப்படும்.

இதற்காக கடைகளில் வாங்கும் க்ரீம்கள், லோசன்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் அப்போதைக்கு மிருதுத்தன்மையைக் கொடுத்தாலும், அதன்பின் மீண்டும் சொரொசொரப்பாகியும், வறண்டும் போய்விடும்.

இதையெல்லாம் விட்டு விட்டு நிரந்தரமாக இயற்கை வழியில் எப்படி கைளை பட்டுப்போல் மாற்றுவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • தேன் மெழுகு- 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்-2 டீஸ்பூன்
  • கோகோ பட்டர் -1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் இந்த மூன்றையும் இரு மடங்கு கொதிக்கும் நீரில் போடவும். அவைகளை கரையும் வரை கொதிக்க விடுங்கள்.

அதன் பின் பாதாம் எண்ணெய் அல்லது லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெயை சில துளிகள் இடவும்.

பிறகு சோற்றுக் கற்றாழையின் சதைபகுதி, தேன் அகியவற்றையும் சேர்த்து எல்லாம் சேர்ந்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.இப்போது இந்த கலவையை ஆற விடுங்கள்.

குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். இது நன்றாக குளிர்ந்து, உறைந்துவிடும். இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக க்ரீம் போல் ஆகிவிடும்.

இதனை ஒரு சுத்தமான கன்டெயினரில் வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இரவில் இதனை கைகளில் நன்றாக தடவி தூங்கச் செல்லுங்கள். க்ரீம் உபயோகப்படுத்தியதும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் கைகள் மிகவும் மிருதுவாகி, சொரசொரப்பு காணாமல் போய்விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers